ADDED : பிப் 19, 2026 04:17 AM
அந்தியூர்: அந்தியூர் அருகே, அத்தாணி ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம் நேற்று நடந்-தது.
அந்தியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சின்னமார நாயக்கர் வர-வேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ராஜாகிருஷ்ணன், ரமணீதரன் முன்னிலை வகித்தனர். ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்து பேசினார்.
இக்கூட்டத்தில் மார்ச், 4ம் தேதி அந்தியூரில் நடக்கும் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பொதுக்கூட்டம் சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, அந்தியூர் அடுத்த அண்ணாமடுவு பகுதியில் பொதுக்கூட்டம் நடக்கவுள்ள இடத்தை பார்வையிட்டனர். அந்தியூர் நகர செயலாளர் மீனாட்சி சுந்தரம், ஒன்றிய துணை செயலாளர் சண்முகானந்தம், வக்கீல் சுப்-பிரமணியம், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் முருகப்பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
