பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு அ.தி.மு.க., சார்பில் அன்னதானம்
பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு அ.தி.மு.க., சார்பில் அன்னதானம்
ADDED : ஜன 17, 2026 04:48 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: தைப்பூசத்துக்காக, பழனிக்கு பாதயாத்திரை பயணத்தை ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கடந்த, 3 நாட்களாக சென்று வருகின்றனர்.
இவர்களுக்கு பல்வேறு அமைப்புகள், தனி நபர்கள் சார்பில் உணவு பொருட்கள், அன்னதானம், தண்ணீர் பாட்டில், மருந்து, பிஸ்கட் போன்றவைகளை வழங்கி வருகின்றனர்.ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க., பகுதி செயலர் மற்றும் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் தங்கமுத்து தலைமையில், ஈரோடு, கருங்கல்பாளையம் சோதனைச்சாவடி அருகே பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, ராமலிங்கம் ஆகியோர் அன்னதானம் வழங்கினர்.
முன்னாள் எம்.எல்.ஏ., தென்னரசு, முன்னாள் துணை மேயர் பழ-னிசாமி, சூரம்பட்டி ஜெகதீசன், மாவட்ட மாணவரணி செயலர் ரத்தன் பிரத்வி
உட்பட பலர் பங்கேற்றனர்.
