தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/அ.தி.மு.க.,- தி.மு.க., போட்டி பூஜையால் குழப்பம்

அ.தி.மு.க.,- தி.மு.க., போட்டி பூஜையால் குழப்பம்

அ.தி.மு.க.,- தி.மு.க., போட்டி பூஜையால் குழப்பம்


ADDED : மே 07, 2025 01:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 07, 2025 01:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு



பஞ்சப்பள்ளி:பஞ்சப்பள்ளி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிக்கு, அ.தி.மு.க., -தி.மு.க.,வினர் போட்டி பூஜை நடத்தியதால் விவசாயிகள் குழப்பமடைந்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளியில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், சின்னாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்தது. இதனால், நீர்வரத்து அதிகரித்ததால் அணையின் பாதுகாப்பு கருதி, 28,500 கன அடி உபரிநீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது. சின்னாறு அணையின் கீழ்புறத்தில் இருந்த ஜெல்திம்மனுார் அணைக்கட்டு மற்றும் ராஜபாளையம் அணைக்கட்டுகள் சேதமடைந்தன. இதனால், ஆற்றிலிருந்து வெளியேறும் உபரி நீரை, ஜெல்திம்மனுார் ஆற்றின்



குறுக்கே, தடுப்பணை கட்டி கால்வாய் வழியாக, அமானிமல்லாபுரம், ராஜபாளையம், பஞ்சப்பள்ளி, சாமனுார் உட்பட, 15 ஏரிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, தடுப்பணை கட்ட நீர்வளத்துறை நிதியில் இருந்து, 4.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து, கடந்த மார்ச், 31ல், முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வுமான அன்பழகன் பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். ஆனாலும், பணி தொடங்காமல் கிடப்பில் இருந்தது. இந்நிலையில், அதே பணிக்கு, ஒரு கோடி ரூபாய் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து, வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம், நேற்று பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இதில், கலெக்டர் சதீஸ், மாவட்ட செயலாளர்கள் மணி, பழனியப்பன், ஆர்.டி.ஓ., காயத்ரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஒரே தடுப்பணை திட்டத்திற்கு, அ.தி.மு.க., தி.மு.க.,வினர் போட்டி பூஜை நடத்தி, கூடுதலாக, ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதால், விவசாயிகள் குழப்பமடைந்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us