ADDED : ஏப் 12, 2026 06:14 AM
அ நிறம் | அளவு
ஈரோடு, ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க., 42வது வாடு வட்ட செயலாளராக இருந்தவர் வீரா செந்தில். இந்நிலையில் அக்கட்சியில் இருந்து விலகி செங்கோட்டையன் முன்னிலையில் த.வெ.க.,வில் இணைந்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: மாநகர் மாவட்ட அ.தி.மு.க., பகுதி செயலாளர் ஒருவர், எனக்கு மிகுந்த நெருக்கடி கொடுத்தார்.
இதுகுறித்து மாவட்ட செயலரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் த.வெ.க.,வில் இணைந்துள்ளேன். இவ்வாறு கூறினார்.
