அ.தி.மு.க., பணிமனை மோதல் தேர்தல் பொறுப்பாளர் மாற்றம்
அ.தி.மு.க., பணிமனை மோதல் தேர்தல் பொறுப்பாளர் மாற்றம்
ADDED : ஏப் 09, 2026 03:42 AM
ஈரோடு: ஈரோடு கிழக்கு, மேற்கு தொகுதிக்கு மாநகர் மாவட்ட அ.தி.மு.க., செயலர் ராமலிங்கம் தலைமையில், 2 தேர்தல் பணிக்-குழு அமைக்கப்பட்டது. ஈரோடு கிழக்குக்கு முன்னாள் எம்.எல்.ஏ., தென்னரசு, பகுதி செயலர் பழனிசாமி ஆகியோரும், ஈரோடு மேற்குக்கு
முன்னாள் மேயர் மல்லிகா உட்பட சிலர் நிய-மிக்கப்பட்டனர்.கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பணிமனை திறப்பு விழா நடந்த போது, மாவட்ட செயலர் ராமலிங்கம் வரும் முன்பே, பணிமனையை திறக்க செய்து, மாவட்ட செயலரிடம் பகுதி செயலர் பழனிசாமி கேலி, கிண்டலாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கோபித்து கொண்ட மாவட்ட செயலர் வெளிநடப்பு செய்து, பிரச்னையா-னது.
அதேபோல, மேற்கு தொகுதி ஆலோசனை கூட்டத்திலும், மாவட்ட செயலரை பகுதி செயலர் பழனிசாமி, அவரது ஆதரவா-ளர்கள் நாகரீகமற்றதாக பேசினர். பின், தொண்டர்கள் மோதிக் கொண்டனர். இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பொறுப்பாளர் பணியில் இருந்து பழனிசாமி நீக்கப்பட்டு, புரட்சி தலைவி பேரவை மாநில துணை செயலர் வீரகுமார் நியமிக்கப்-பட்டுள்ளார்.
ஈரோடு மேற்கு தொகுதி பொறுப்பாளர்களாக முன்னாள் மேயர் மல்லிகா, பகுதி செயலர் பழனிசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்-ளனர்.
