ஈரோடு கிழக்கு தொகுதியில் பகிரங்கமாக பணம் பட்டுவாடா செய்த அ.தி.மு.க.,வினர்
ஈரோடு கிழக்கு தொகுதியில் பகிரங்கமாக பணம் பட்டுவாடா செய்த அ.தி.மு.க.,வினர்
ADDED : ஏப் 16, 2026 06:13 AM
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதியில், ஆரத்தி எடுப்பவர்களுக்கு, அ.தி.மு.க.,வினர் பணம் பட்டுவாடா செய்தது வைரலாகி வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளராக மனோகரன் களமிறக்கப்பட்டுள்ளார். இவர் தனது ஆதரவாளர்களுடன், தினமும் வாக்காளர்களை சந்தித்து ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதன்படி நேற்று காலை, கருங்கல்பாளையம் சுற்று வட்டார பகுதிகளான கே.என்.கே. ரோடு, திருநகர் காலனி, பிள்ளையார் கோவில் வீதி என பல்வேறு இடங்களில் ஓட்டு சேகரித்தார்.
இதில் வீர வீதியை சேர்ந்த சிறுவர், சிறுமியர், பெண்கள் என ஏராளமானோரை வரிசையாக நிறுத்தி வைத்து, வேட்பாளருக்கு ஆரத்தி எடுக்க அக்கட்சியினர் ஏற்பாடு செய்தனர்.
பிறகு வேட்பாளர் வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், அ.தி.மு.க நிர்வாகிகள் இருவர் பொது வெளியில் பகிரங்கமாக தலா, 100 ரூபாய் வினியோகம் செய்தனர்.
இது தொடர்பான வீடியோ பதிவுகள் பகிரப்பட்டு, சமூக வலைதளங்களில் வைரலாகி
வருகிறது.
