தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 14, 2026 08:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2026 08:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம்: காங்கேயம் பஸ் நிலைய வளாகத்தில், நேற்று காலை 10:00 மணி அளவில் கிராம மக்களின், 125 நாள் வேலை உறுதி திட்டத்தை சீர்குலைக்க முயலும், தி.மு.க., அரசை கண்டித்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அ.தி.மு.க., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.காங்கேயத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ.,வும், காங்கேயம் ஒன்றிய செயலாளருமான நடராஜ் தலைமை வகித்தார். நகர செயலாளர் வெங்கு மணிமாறன் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் த.மா.கா., துணை தலைவர் விடியல் சேகர், பா.ஜ., மாநில செயலாளர் கோபாலகிருஷ்ணன் உட்பட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர், மக்கள் கலந்து கொண்டனர். தாராபுரத்தில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பாலகுமார், செல்வகுமார், ரமேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us