தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி தொகுதிகளில் சரிந்த அ.தி.மு.க., ஓட்டு

ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி தொகுதிகளில் சரிந்த அ.தி.மு.க., ஓட்டு

ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி தொகுதிகளில் சரிந்த அ.தி.மு.க., ஓட்டு


ADDED : மே 08, 2026 03:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 08, 2026 03:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி தொகுதிகளில், 2021 தேர்தலை ஒப்பிடுகையில் தற்போதைய தேர்தலில் அ.தி.மு.க., ஓட்டுகள் கடுமையாக சரிந்துள்ளது.

கொங்கு மண்டலமும், குறிப்பாக ஈரோடு மாவட்டமும் அ.தி.மு.க.,வின் கோட்டையாகும். ஜெ., மறைவுக்கு பின் கட்சி தலைமை கடுமை காட்டாததாலும், உட்கட்சி பூசலை தீர்க்காததாலும், அ.தி.மு.க., ஓட்டு சரிவை சந்தித்து வருகிறது.உதாரணமாக ஈரோடு கிழக்கில், 2021ல் அ.தி.மு.க., கூட்டணியில் இரட்டை இல்லை சின்னத்தில் போட்டியிட்ட த.வெ.க., வேட்பாளர் எம்.யுவராஜா, 58,396 ஓட்டுகள் பெற்றார். அத்தொகுதியில், 2023 இடைத்தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளர் தென்னரசு, 43,923 ஓட்டுகளும், தற்போதைய தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர் மனோகரன், 38,183 ஓட்டுகள் பெற்றார்.இத்தொகுதியில் காங்., சார்பில் போட்டியிட்ட கோபிநாத், வெளியூர்காரர், கட்சியினர் ஒத்துழைப்பு இன்மை, தி.மு.க.,வினர் வேலை செய்யாதது, சிறுபான்மையினர் ஓட்டு என பல இருந்தும், 45,781 ஓட்டுகள் பெற்று, இரண்டாமிடம் பிடித்தார்.மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஒத்துழைத்தும், உள்குத்து வேலை செய்யாமல் இருந்திருந்தால், அ.தி.மு.க., வெல்லவும் வாய்ப்பிருந்தது.அதுபோல, ஈரோடு மேற்கில், 2021ல் அ.தி.மு.க., வேட்பாளர் ராமலிங்கம், 78,668 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தார். தி.மு.க., வேட்பாளர் முத்துசாமி, 1,00,757 ஓட்டு பெற்றார். தற்போதைய தேர்தலில், த.மா.கா.,வின் யுவராஜா தாமரை சின்னத்தில் அ.தி.மு.க., கூட்டணியில் நின்று, 38,185 ஓட்டுகளே பெற்று, மூன்றாமிடம் சென்றார். கடந்த தேர்தலை ஒப்பிடுகையில், 40,000 ஓட்டு சரிந்துள்ளது.மொடக்குறிச்சியில், 2021ல் அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ., வேட்பாளராக சரஸ்வதி போட்டியிட்டு, 78,125 ஓட்டுகள் பெற்றார். தற்போது அவரது மருமகள் கிருத்திகா, அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ.,வில் போட்டியிட்டு, 58,285 ஓட்டுகளே பெற்றுள்ளார். கடந்த தேர்தலைவிட, 20,000 ஓட்டு சரிந்துள்ளது.தவிர, இத்தொகுதியில் த.வெ.க., வேட்பாளர் சண்முகனைவிட, 2,430 ஓட்டுகளே கிருத்திகா குறைவாக பெற்று தோல்வி அடைந்தார். அ.தி.மு.க.,வினர் முழு உழைப்பை வழங்கி இருந்தால், பா.ஜ., வென்றிருக்கும் என்பது அ.தி.மு.க., தொண்டர்களின் ஆதங்கம்.கடந்த காலங்களில் ஒவ்வொரு தேர்தல் முடிந்ததும், கட்சி அல்லது கூட்டணியுடன் பணி செய்யாமல், ஓட்டு சரிவுக்கு காரணமாக இருந்தது, தோல்வி, உள்குத்து வேலையை எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா போன்றோர் ஆய்வு செய்து, முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள், எதிர் வேலை செய்தவர்களை அகற்றிவிட்டு, பணி செய்வோரை நியமித்துள்ளார். அதுபோன்ற நடவடிக்கையை இ.பி.எஸ்., செயல்படுத்த அ.தி.மு.க., தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us