அனைத்து பி.எஸ்.என்.எல்., தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
அனைத்து பி.எஸ்.என்.எல்., தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 05, 2026 06:28 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோட்டில், அனைத்து பி.எஸ்.என்.எல்., தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது.
மூன்றாவது
ஊதியகுழு ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஊதிய உயர்வு வழங்க
வலியுறுத்தினர். பி.எஸ்.என்.எல்., தேசிய டெலிகாம் ஊழியர்கள்
கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் செங்கோட்டையன், பி.எஸ்.என்.எல்., ஊழியர்
சங்க மாநில உதவி தலைவர் கிட்டுசாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.
கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இக்கோரிக்கையை
வலியுறுத்தி வரும், 20ல் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம்
நடைபெறும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
