/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : மே 21, 2025 01:05 AM
ஈரோடு, அனைத்து தொழிற்சங்கங்கள், அமைப்புகள் சார்பில், ஈரோடு, சூரம்பட்டி நால்ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஏ.ஐ.டி.யு.சி., மாநில செயலர் சின்னசாமி தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., சுப்பிரமணியம், ம.தி.மு.க., ரவி உட்பட பலர் பங்கேற்றனர். மத்திய அரசு தொழிலாளர் சட்டங்களை, நான்கு சட்ட தொகுப்பாக மாற்றியதை கைவிட வேண்டும். குறைந்த பட்ச ஊதியம், 26,000 ரூபாய், குறைந்தபட்ச ஓய்வூதியம், 9,000 ரூபாயாக வழங்க வேண்டும்.
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது. பணமயமாக்கல் திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உட்பட, 19 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
* தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், ஈரோடு தாலுகா அலுவலகம் முன், மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொழிலாளர்களின் உரிமையை பறிக்கும் புதிய தொழிலாளர் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். சத்தீஸ்கர், ஜார்கண்ட், ராஜஸ்தான் மாநிலங்களை போல பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும். அங்கன்வாடி, சத்துணவில் பணியாற்றுவோரை நிரந்தர ஊழியராக்க வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம், அவுட்சோர்சிங், கான்ட்ராக்ட் பணி நியமனங்களை நிரந்தரமாக்க வேண்டும். காப்பீட்டு துறையில் அந்நிய முதலீட்டை நிறுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.