வ.உ.சி., பூங்காவுக்கு தற்காலிக சுற்றுச்சுவராக அலுமினிய 'ஷீட்'
வ.உ.சி., பூங்காவுக்கு தற்காலிக சுற்றுச்சுவராக அலுமினிய 'ஷீட்'
ADDED : ஆக 30, 2026 05:49 AM

ஈரோடு:ஈரோடு வ.உ.சி., பூங்கா பின்புற பகுதியில், 50 அடிக்கு சுற்றுச்சுவர் இல்லாமல் பல மாதங்களாக இருந்து வருகிறது.
இதனால்
இரவில் சமூக விரோதிகள் குற்ற செயல்களில் ஈடுபட்டு பூங்காவிற்குள்
வந்து ஒளிந்து கொள்கின்றனர். அதுபோல் இரவில் டூவீலரில் செல்வோரை
கண்காணித்து பூங்காவில் இருந்து திடீரென வந்து கத்தியை காட்டி மிரட்டி
பணம், நகை, மொபைல் போன் உள்ளிட்டவற்றை பறித்து செல்வதும்
நடக்கிறது.
இதுகுறித்து கடந்த ஜூலை இறுதியில் மாநகராட்சி
முதலாவது மண்டல தலைவர் பழனிச்சாமி (தி.மு.க.,) பூங்காவில் இடிந்து
போன, 50 அடிக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். நிதியில்லை என்றால்
தற்காலிகமாவது சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை
விடுத்தார்.
ஆக., மாத மாமன்ற கூட்டம் நாளை நடக்கவுள்ள நிலையில்,
அலுமினிய ஷீட்டால் மாநகராட்சி நிர்வாகம் தற்காலிக சுற்றுச்சுவர்
அமைத்துள்ளது.
வரிகளை வாரி குவிப்பதில், 100 சதவீதம் இலக்கு
நிர்ணயித்து செயல்படும் மாநகராட்சி, மக்கள் பணி மற்றும் பாதுகாப்பில்
போனால் போகட்டும் என்பதுபோல்தான் நடந்து கொள்கிறது. இதற்கு இந்த
செயலும் ஒரு உதாரணம்.
