/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொங்கு பொறியியல் கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் கொண்டாட்டம்
/
கொங்கு பொறியியல் கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் கொண்டாட்டம்
கொங்கு பொறியியல் கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் கொண்டாட்டம்
கொங்கு பொறியியல் கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் கொண்டாட்டம்
ADDED : ஆக 07, 2025 01:33 AM
ஈரோடு, கொங்கு பொறியியல் கல்லுாரியின் முன்னாள் மாணவர் சங்கம், முன்னாள் மாணவர்களின் தொடர்புகளை வளர்ப்பதற்கும், அவர்களின் ஈடுபாட்டை ஊக்குவிப்பதற்கும் ஆண்டுதோறும் முன்னாள் மாணவர் சந்திப்பு நடந்து வருகிறது. இதன் நீட்சியாக, 2000ம் ஆண்டு கல்லுாரி படிப்பை முடித்து சென்ற மாணவர்களுக்கான வெள்ளி விழா, முன்னாள் மாணவர் சந்திப்பு கடந்த 2ம் தேதி கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட பல்வேறு பகுதிகளிலிலிருந்து, 250 முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர். முன்னாள் மாணவர்கள் பலர் அரசு துறைகளில் மதிப்புமிக்க பதவி
களை வகிக்கின்றனர். சிலர் உயர் வருவாய் தொழில் முனைவோராகவும், தொடக்க நிறுவனர்களாகவும் தங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளனர். முன்னாள் மாணவர்கள் தங்களின் முன்னாள் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி, கவுரவித்தனர். விழாவில் மரக்கன்றுகளும் வினியோகிக்கப்பட்டன.
கல்லுாரி தாளாளர் இளங்கோ, கொங்கு வேளாளர் தொழில்நுட்ப அறக்கட்டளை முன்னாள் செயலாளர் பழனிசாமி, கல்லுாரி முன்னாள் தாளாளர் தேவராஜன், அறக்கட்டளை பாரம்பரிய உறுப்பினர்கள், கல்லுாரி முதல்வர் பரமேஸ்வரன், முன்னாள் முதல்வர்கள் நடராஜன், குப்புசுவாமி, பாலுசாமி, தலைமை ஒருங்கிணைப்பாளர்கள், பல்வேறு துறை தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.