/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தம்;ஒத்துழைப்பு வழங்க கோரிக்கை
/
வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தம்;ஒத்துழைப்பு வழங்க கோரிக்கை
வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தம்;ஒத்துழைப்பு வழங்க கோரிக்கை
வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தம்;ஒத்துழைப்பு வழங்க கோரிக்கை
ADDED : ஆக 21, 2024 02:49 AM
ஈரோடு;ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:வரும் ஜன., 1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு சிறப்பு சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், வீடுவீடாக சென்று வாக்காளர் விபரம் சரி பார்க்கும் பணி உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுகின்றனர்.
வரைவு வாக்காளர் பட்டியல் அக்.,29ம் தேதி, இறுதி வாக்காளர் பட்டியல் ஜன.,6ம்தேதியும் வெளியிடப்படுகிறது. இதற்காக வாக்காளர் விபரம் சரி பார்க்கும் பணி தொடங்கியுள்ளது. அக்., 18 வரை நடக்கிறது.
ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், தங்கள் வீட்டுக்கு வரும்போது தங்கள் பெயர், புகைப்படம் உள்ளிட்ட விபரங்களில் திருத்தம் செய்வது பற்றி தெரிவிக்கலாம். புதிதாக பெயர் சேர்த்தல், இறந்தவர்கள் பெயர் நீக்குதலையும், புலம் பெயர்ந்த பெயரை நீக்குதலையும் இணைய வழியில், www.voters.eci.gov.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு, 1950 (0424) என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தெளிவுபெறலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

