ADDED : ஜூலை 23, 2024 02:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வலியுறுத்தி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் மேற்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.
மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். அரசு துறை-களில் ஊழலை ஒழித்து, வேலையில்லா திண்டாட்டத்தை களைய வேண்டும். போதை பொருட்கள் பயன்பாட்டை ஒழிக்க வேண்டும். சட்டம்--ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும். விலை-வாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் அர்ஜூன், இலக்கிய அணி மாவட்ட செய-லாளர் சரஸ்வதி உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.