ADDED : ஏப் 13, 2026 03:18 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு மாணிக்கம்பாளையம் மாரியம்மன் கோவில் அருகே மொபைல் கடை வைத்திருப்பவர் மயில்சாமி, 41; இவரது கடையில் கடந்த, 4ம் தேதி இரவு திருட்டு போனது.
இதேபோல் இவரது கடைக்கு அருகேயுள்ள குமார் மளிகை கடையிலும் அதே நாளில் திருட்டு நடந்தது. புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார், குற்றவாளிகளை தேடி வந்தனர்.'சிசிடிவி' கேமரா பதிவுகளின் அடிப்படையில் நடந்த விசாரணையில், இரு கடைகளிலும் திருடியது, ஆந்திர மாநிலம் சித்துாரை சேர்ந்த ஹேமந்த், 21, என தெரிய வந்தது. பி.பி.ஏ., பட்டதாரியான அவரை, போலீசார் கைது செய்தனர். அவர் மீது சித்துாரில் ஒரு வழக்கு உள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஈரோடு கிளை சிறையில் அழைத்தனர்.
