ADDED : நவ 02, 2025 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை, பெருந்துறை நகராட்சி, 12 வது வார்டுக்கு உட்பட்ட பெரியவேட்டுவ பாளையத்தில், தனியார் பங்களிப்புடன், புதியதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
பெருந்துறை நகராட்சி தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்து, புதிய அங்கன்வாடி கட்டடத்தை திறந்து வைத்தார். நகராட்சி துணைத் தலைவர் சண்முகம், ஆணையாளர் புனிதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், நகராட்சி வார்டு கவுன்சிலர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

