ADDED : பிப் 04, 2026 12:03 PM

அ நிறம் | அளவு
ஈரோடு: தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், காலவரையற்ற வேலை நிறுத்த மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்ட தலைவர் தனுஷ்கோடி தலைமையில், ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் பேசினார். சத்துணவு மையங்களில் காலியாக உள்ள, 60,000 பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு துறைகளில் பணி மூப்பு அடிப்படையில் சத்துணவு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். ஓய்வு ஊழியர் களுக்கு, 6,750 ரூபாய், அகவிலைப்படியுடன் இணைத்து ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என்பது உட்பட, 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தினர். பிறகு திருமகன் ஈவெரா சாலையில் மறியலில் ஈடுபட்டதால், 17 ஆண்கள் உட்பட, 666 பேரை போலீசார் கைது செய்தனர்
