/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஓடையில் சிறுவன் பலி சம்பவம் அங்கன்வாடி ஊழியர் சஸ்பெண்ட்
/
ஓடையில் சிறுவன் பலி சம்பவம் அங்கன்வாடி ஊழியர் சஸ்பெண்ட்
ஓடையில் சிறுவன் பலி சம்பவம் அங்கன்வாடி ஊழியர் சஸ்பெண்ட்
ஓடையில் சிறுவன் பலி சம்பவம் அங்கன்வாடி ஊழியர் சஸ்பெண்ட்
ADDED : நவ 08, 2025 04:52 AM
ஈரோடு:ஈரோடு
சூரம்பட்டி நால்ரோடு வேப்பிலை மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர்
சக்ரவர்த்தி, 34; தொழிலாளி. இவரின் மனைவி சந்திரகுமாரி, 31;
தம்பதியரின் மகன் சஞ்சய், 5; அரசு உதவி பெறும் பள்ளியில் சஞ்சய் முதல்
வகுப்பு படித்து வந்தார்.
கடந்த, 5ல் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில்
இருந்ததால், சொந்த வேலையாக வெளியே சென்ற சக்ரவர்த்தி, இளைய மகள்
படிக்கும் அங்கன்வாடி மையத்தில் விட்டு சென்ற நிலையில் சஞ்சய்
மாயமானார். அங்கன்வாடி பணியாளர் லாவண்யா தேடிப்பார்த்தும்
கிடைக்கவில்லை.
இந்நிலையில் மையம் அருகே செல்லும் பெரும்பள்ளம்
ஓடையில் சடலமாக மீட்கப்பட்டார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி
திட்ட அலுவலர் பூங்கோதை விசாரித்தார்.
இதை தொடர்ந்து
கவனக்குறைவு, மையத்தில் பதிவு செய்யாத சிறுவனை அனுமதித்த
காரணத்துக்காக, லாவண்யாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும்
அங்கன்வாடி மேற்பார்வையாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
அனுப்பியுள்ளார்.