தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/அண்ணனின் கள்ளக்காதலியை தாக்கிய ஆவேச தங்கைகள் கைது

அண்ணனின் கள்ளக்காதலியை தாக்கிய ஆவேச தங்கைகள் கைது

அண்ணனின் கள்ளக்காதலியை தாக்கிய ஆவேச தங்கைகள் கைது


ADDED : மே 11, 2026 03:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 11, 2026 03:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அந்தியூர்,:அந்தியூர் அருகே அண்ணனின் கள்ளக்காதலியை, கட்டையால் தாக்கிய தங்கைகளை, போலீசார் கைது செய்தனர்.

அந்தியூர் அருகே பாறையூரை சேர்ந்தவர் வசந்தகுமார், -30; வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார். இவருக்கும் அந்தியூர் தவிட்டுப்பாளையம் பழனியப்பா இரண்டாவது வீதியை சேர்ந்த கணவனை இழந்த நிர்மலாதேவி, 45, என்பவருக்கும் மூன்றாண்டாக கள்ளக்காதல் இருந்தது. இருவருக்கும் குடிப்பழக்கமும் இருந்தது.

நேற்று முன்தினம் இரவு, குடிபோதையில் கள்ளக்காதலியுடன் பாறையூரில் உள்ள வீட்டில் வசந்தகுமார் டிவி பார்த்து கொண்டிருந்தார். அப்போது வசந்தகுமாரின் தங்கைகளான வைஷ்ணவி, 27; தாரணி, 24, வீட்டுக்கு வந்தனர். இவளை எதற்கு வீட்டுக்கு அழைத்து வந்தாய் எனக்கூறி, அண்ணனிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது நிர்மலாதேவிக்கும், அவர்களுக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் மண்வெட்டி கட்டையை எடுத்து, நிர்மலாதேவியை இருவரும் தாக்கினர். இதில் அவர் தலையில் பலத்த காயமடைந்தார். மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவக்கல்லுாரி மருந்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவர் புகாரின்படி வைஷ்ணவி, தாரணியை, அந்தியூர் போலீசார் கைது செய்து, பவானி ஜே.எம்., கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை பெண்கள் சிறையில் நேற்று அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us