ADDED : ஆக 12, 2025 02:09 AM
கோபி,தி.மு.க., சார்பில், கோபியில், அண்ணா அறிவகத்தை, தொழில்துறை அமைச்சர் ராஜா நேற்று திறந்து வைத்தார். பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தி.மு.க.,வின் கோட்பாடு மற்றும் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் அண்ணா அறிவகம் என்ற அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி இங்கு அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வரின் முன்னெடுப்பில், ௧௦.௩௨ லட்சம் கோடி ரூபாய்க்கான முதலீடு தமிழகத்துக்கு வந்துள்ளது. அதன் மூலம், 30 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஈரோடு போன்ற நகரங்களில், இன்னும் வளர்ச்சியை கொண்டு வர தயாராக இருக்கிறோம். அதேசமயம் அதற்கான நிலம் கிடைப்பதில் பிரச்னை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்வில் தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம் உள்பட பலர் பங்கேற்றனர்.

