பெருந்துறை அ.தி.மு.க., சார்பில் அண்ணாதுரை பிறந்த நாள்விழா
பெருந்துறை அ.தி.மு.க., சார்பில் அண்ணாதுரை பிறந்த நாள்விழா
ADDED : செப் 16, 2026 06:48 AM

அ நிறம் | அளவு
பெருந்துறை:பெருந்துறை அ.தி.மு.க., சட்டமன்ற தொகுதி சார்பில், அண்ணாதுரையின், 118வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி செல்வராஜ் தலைமை வகித்தார். வடக்கு ஒன்றிய செயலாளர் ரஞ்சித்ராஜ் முன்னிலை வகித்தார்.
ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும் பவானி எம்.எல்.ஏ.,வுமான கருப்பணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பெருந்துறையில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அவரை தொடர்ந்து கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., பொன்னுதுரை, நகர செயலாளர்கள் கல்யாணசுந்தரம், பழனிசாமி, சிவசுப்பிரமணியம், பூபாலகிருஷ்ணன், பெருந்துறை யூனியன் முன்னாள் சேர்மன் சாந்தி ஜெயராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
