/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அண்ணாதுரை பிறந்த நாள் சைக்கிள் போட்டி
/
அண்ணாதுரை பிறந்த நாள் சைக்கிள் போட்டி
ADDED : செப் 28, 2025 02:11 AM
ஈரோடு;முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு, ஈரோட்டில் சைக்கிள் போட்டி நேற்று நடந்தது. கனி ராவுத்தர் குளம் துவங்கி வில்லரசம்பட்டி, 4 ரோடு வழியாக வேளாளர் பொறியியல் கல்லுாரியில் நிறைவடைந்தது.
டவுன் டி.எஸ்.பி., முத்துகுமரன் போட்டியை துவக்கி வைத்தார். மாணவ, மாணவியருக்கு தனித்தனியாக பேட்டி நடந்தது. இதில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ௧௩ வயது மற்றும் ௧௫ வயது பிரிவுகளில், மாணவர், மாணவியருக்கு தனித்தனியாக நடந்தது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று பரிசாக, 5,000, 3,000, 2,000 ரூபாய் வழங்கப்படும். நான்கு முதல் 10ம் இடம் வரை வென்றோருக்கு தலா, 250 ரூபாய் பரிசாக வழங்கப்படுகிறது.