ADDED : பிப் 04, 2026 11:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: முன்னாள் முதல்வர் அண்ணதுரை நினைவு நாளையொட்டி, காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகத்தில், திருப்பூர் தி.மு.க., கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன் தலைமையில், அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருப்பூர் மாவட்ட துணை செயலாளர் முத்துக்குமார், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கார்த்திகேயன், காங்கேயம் நகர செயலாளர் சேமலையப்பன், காங்கேயம் ஒன்றிய செயலாளர்கள் சிவானந்தன், கருணைபிரகாஷ் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.* தாராபுரத்தில் தி.மு.க., நகர செயலாளர் முருகானந்தம் தலைமையிலான கட்சியினரும், அ.தி.மு.க., நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையிலான கட்சியினரும், பழைய நகராட்சி அலுவலகம் அருகே உள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

