ADDED : செப் 16, 2025 01:47 AM
ஈரோடு, முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் விழா, தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், ஈரோடு பெரியார் நகரில் உள்ள வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி முகாம் அலுவலகத்தில் நடந்தது.
அண்ணாதுரை உருவப்படத்துக்கு அமைச்சர் முத்துசாமி மாலை அணிவித்தார். அதேபோல, மணல்மேட்டில் உள்ள தி.மு.க., அலுவலகம், பன்னீர்செல்வம் பூங்கா, வீரப்பன்சத்திரம் ஆகிய இடங்களில் உள்ள சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
எம்.பி.,க்கள் ஈரோடு பிரகாஷ், அந்தியூர் செல்வராஜ், ஈரோடு கிழக்கு தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரகுமார், மாநகர செயலர் சுப்பிரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.
* ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு, மாவட்ட செயலர் ராமலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ஈரோடு கிழக்கு தென்னரசு, மொடக்குறிச்சி சிவசுப்பிரமணி, ஈரோடு முன்னாள் எம்.பி., செல்வகுமார சின்னைய
ன், முன்னாள் மேயர் மல்லிகா, துணை மேயர் பழனிசாமி ஆகியோர் பங்கேற்றனர்.* ஈரோடு ஈவெரா - அண்ணா நினைவகத்தில், அண்ணாதுரை சிலைக்கு கலெக்டர் கந்தசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஈரோடு கிழக்கு தி.மு.க., எம்.எல்.ஏ., சந்திரகுமார், மேயர் நாகரத்தினம், டி.ஆர்.ஓ., சாந்தகுமார், தாசில்தார் முத்துகிருஷ்ணன், பி.ஆர்.ஓ., சுகுமார், கலைமாமணி ஆகியோர் பங்கேற்றனர்.