/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அண்ணமார் சுவாமி கோவிலில் விரைவில் திருப்பணி துவக்கம்
/
அண்ணமார் சுவாமி கோவிலில் விரைவில் திருப்பணி துவக்கம்
அண்ணமார் சுவாமி கோவிலில் விரைவில் திருப்பணி துவக்கம்
அண்ணமார் சுவாமி கோவிலில் விரைவில் திருப்பணி துவக்கம்
ADDED : மே 28, 2024 07:17 AM
ஈரோடு : ஈரோடு அருகே கஸ்பாபேட்டை பகுதியில், பிரசித்தி பெற்ற அண்ணமார் சுவாமி கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில், சில சமூகத்தினரின் குலதெய்வமாக உள்ளது.
ஓராண்டுக்கு முன், ஒரு சமூகத்தை சேர்ந்த பிரமுகர்கள் சிலர், அறநிலையத்துறை மற்றும் பிற சமூக மக்களிடம் ஆலோசிக்காமல், கோவிலில் திருப்பணி மேற்கொள்ள பாலாலயம் செய்தனர். இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில் புகார் தரப்பட்டதால், கோவில் திருப்பணி கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் கோவிலில் திருப்பணி எப்போது தொடங்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து கோவில் தக்கார் ஜெயலதா கூறியதாவது: அண்ணமார் சுவாமி கோவில் சில சமூகத்தினரின் குலத்தெய்வம் ஆகும். கோவில் திருப்பணி மேற்கொள்வதில், அச்சமூகத்தினரிடையே மோதல் போக்கு நிலவியது. அறநிலையத்துறை சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளது. இதில் ஹிந்து சமய அறநிலையத்துறை மட்டும் திருப்பணிகளை மேற்கொள்ள, அச்சமூகத்தினர் சம்மதித்துள்ளனர். ஓரிரு வாரங்களில் திருப்பணி தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.