/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தீபாவளி திருநாளில் 'லட்டு' தேரில் அருள்பாலித்த அன்னபூரணி
/
தீபாவளி திருநாளில் 'லட்டு' தேரில் அருள்பாலித்த அன்னபூரணி
தீபாவளி திருநாளில் 'லட்டு' தேரில் அருள்பாலித்த அன்னபூரணி
தீபாவளி திருநாளில் 'லட்டு' தேரில் அருள்பாலித்த அன்னபூரணி
ADDED : அக் 21, 2025 02:11 AM
சேலம்,தீபாவளி திருநாளான நேற்று, லட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில், அன்னபூரணி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சேலம் செவ்வாய்பேட்டை, ஹரிஹர தேவாலயத்தில், சாஸ்தா சேவா சமிதி நித்ய அன்னதான டிரஸ்ட் சார்பில், 2012ல் அன்ன
பூரணி சிலை செய்து காசிக்கு எடுத்து சென்று, கங்கை நீரால் சிறப்பு அபி ேஷகம் செய்து எடுத்து வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அன்னபூரணி தாயாருக்கு ஆண்டுதோறும் தீபாவளி திருநாளில், ஆயிரக்கணக்கான லட்டுகளால் தேர் அலங்காரம் செய்து பூஜை செய்யப்படுவது வழக்கம். 12ம் ஆண்டாக தீபாவளி திருநாளான நேற்று காலை, 6:00 மணிக்கு அன்ன
பூரணி தாயாருக்கு அபிேஷகம் செய்து தங்க கவசம் சார்த்தி பூஜை செய்யப்பட்டது. காலை 9:00 மணிக்கு மரத்தேர் முழுவதும் பருப்பு மாவால் செய்யப்பட்ட பல வண்ண லட்டுகளை தயார் செய்து, அலங்கரித்து அதில் அன்ன
பூரணி தாயாரை எழுந்தளரு செய்தனர்.
அங்கு அர்ச்சகர்களால் மகாலட்சுமி ஸ்தோத்திரம் அர்ச்சனை செய்து தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமானோர் தரிசனம் செய்து வழிபட்டனர். லட்டு தேர் அன்னபூரணியை தரிசித்தால், வாழ்வில் வற்றாத செல்வம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தீபாராதனைக்கு பின், தேரில் அலங்கரிக்கப்பட்டிருந்த லட்டுகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில், தீபாவளி திருநாளில் அன்னபூரணி தாயாருக்கு லட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. அதே போன்று, சேலத்தில் அன்னபூரணிக்கு லட்டு தேர் அலங்காரம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி பண்டிகையையொட்டி, கோவிலில் உள்ள காசி விசாலாட்சி அம்மன், காசி விஸ்வநாதர் உள்ளிட்ட தெய்வங்களுக்கும் தங்க கவசம் சார்த்தி சிறப்பு பூஜை செய்யப்பட்டது.