ADDED : மார் 31, 2025 02:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: காங்கேயம் ஒன்றியம் வரதப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா மற்றும் ஐம்பெரும் விழா நடந்தது.
தலைமை ஆசிரியை கீதாமணி வரவேற்றார். வரதராஜ் தலைமை வகித்தார். விழாவில் வேர்கள் அமைப்பு சார்பில் அனைவருக்கும் மரக்கன்று வழங்கப்பட்டது. பதவி உயர்வில் சென்ற தலைமை ஆசிரியருக்கு பாராட்டு, நன்கொடையாளர்க-ளுக்குப் பாராட்டு, ஆண்டு விழா, புரவலர் திட்ட தொடக்க விழா நடந்தது. விழாவையொட்டி மாணவ, மாணவியரின் கலைநி-கழ்ச்சி நடந்தது.