தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/குவாரி வெடி விபத்தில் மேலும் ஒருவர் கைது

குவாரி வெடி விபத்தில் மேலும் ஒருவர் கைது

குவாரி வெடி விபத்தில் மேலும் ஒருவர் கைது


ADDED : ஜன 28, 2025 06:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2025 06:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

டி.என்.பாளையம்: டி.என்.பாளையத்தில் வனப்பகுதியை ஒட்டி, ஸ்டார் கிரஷர் கல் குவாரி செயல்பட்டது. சட்ட விரோதமாக செயல்பட்ட இந்த குவாரியில், பாறையை வெடி வைத்து தகர்த்தபோது ஏற்பட்ட விபத்தில், இரு தொழிலாளிகள் பலியாகினர். இதை தொடர்ந்து குவாரி உரிமையாளர் தம்பதி உள்பட ஏழு பேரை, பங்களாப்புதுார் போலீசார் அடுத்தடுத்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் குவாரி கம்ப்ரஷர் ஆப்பரேட்டரான டி.என்.பாளையம், ஹாஸ்டல் வீதியை சேர்ந்த ராமசாமி மகன் மணி, 39, என்பவரை, பங்களாப்புதுார் போலீசார் கைது செய்தனர். கோபி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர். குவாரி வெடி விபத்து சம்பவத்தில், 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மணியையும் சேர்த்து எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஐந்து பேரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us