/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அகழியை அகலப்படுத்த அனுமதி; காத்திருக்கும் அந்தியூர் வனத்துறை
/
அகழியை அகலப்படுத்த அனுமதி; காத்திருக்கும் அந்தியூர் வனத்துறை
அகழியை அகலப்படுத்த அனுமதி; காத்திருக்கும் அந்தியூர் வனத்துறை
அகழியை அகலப்படுத்த அனுமதி; காத்திருக்கும் அந்தியூர் வனத்துறை
ADDED : பிப் 19, 2025 06:55 AM
அந்தியூர்: ஈரோடு மாவட்டம் அத்தாணி, பொன்னாச்சி அம்மன் கோவில் வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலத்துக்கு நள்ளிரவில் இரை தேடி வந்த, 12 வயதான ஆண் யானை, தோட்ட உரிமையாளரால் அமைக்கப்பட்ட, சட்ட விரோத மின்வேலியில் சிக்கி பலியானது. இதை தொடர்ந்து விவசாயி கைது செய்யப்பட்டு, தோட்டத்துக்கான மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில் யானை, காட்டுபன்றிகளால் பயிர் சேதம் அதிகரித்துள்ளது. எனவே வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் அகழி அமைக்க விவசாயிகள் வலியுறுத்தினர். அதேசமயம் அந்தியூர் வனப்பகுதிக்கு உட்பட்ட கொம்பு துாக்கியம்மன் கோவில் பகுதி உள்ளிட்ட ஒரு சில இடங்களில், அகழி இல்லாததால், விலங்குகள் விவசாய நிலங்களுக்கு எளிதாக புகுகின்றன.
இதுகுறித்து அந்தியூர் வனத்துறையினர் கூறியதாவது: அத்தாணி, கரும்பாறையில் இருந்து கொம்பு துாக்கியம்மன் கோவில் வனம் வரை, 5 கி.மீ., துாரத்துக்கு அகழி உள்ளது. இதில் ஒரு சில இடங்களில் மண்ணால் மூடப்பட்டுள்ளது. மண்ணை அகற்றி அகழியை மேலும் ஆழப்படுத்தி, அகலப்படுத்த வனத்துறை உயரதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு ஓரிரு நாட்களில் கிடைக்க வாய்ப்புள்ளது. உத்தரவு வந்தவுடன் பணி தொடங்கும். இவ்வாறு கூறினர்.

