/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.17.15 லட்சத்துக்கு அந்தியூர் கோவில் விழா தற்காலிக கடை ஏலம்
/
ரூ.17.15 லட்சத்துக்கு அந்தியூர் கோவில் விழா தற்காலிக கடை ஏலம்
ரூ.17.15 லட்சத்துக்கு அந்தியூர் கோவில் விழா தற்காலிக கடை ஏலம்
ரூ.17.15 லட்சத்துக்கு அந்தியூர் கோவில் விழா தற்காலிக கடை ஏலம்
ADDED : ஜூலை 11, 2025 01:00 AM
அந்தியூர், அந்தியூர் குருநாத சுவாமி கோவிலில் நடப்பாண்டு ஆடி தேர்த்திருவிழா ஆக., 13 முதல் 17ம் தேதி வரை நடக்கிறது. இதை முன்னிட்டு சாலையோரத்தில் அமைக்கப்படும் தற்காலிக கடைகளுக்கான ஏலம், யூனியன் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
அந்தியூர் பி.டி.ஓ., சரவணன் தலைமை வகித்தார். புதுப்பாளையம் பாலம் முதல் தண்ணீர்பந்தல்பாளையம் பிரிவு வரை, இரண்டு பகுதிகளிலும், 120 மீட்டர் தொலைவுக்கு கடை வைக்க ஏலம் நடத்தப்பட்டது. இதில், 39 பேர் ஏலத்தில் கலந்து கொண்டனர். புதுப்பாளையத்தை சேர்ந்த உமாநாத், 14 லட்சத்து, 53 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். ஏலத்தொகைக்கு, 18 சதவீத ஜி.எஸ்.டி.,யுடன் சேர்த்து, 17.15 லட்சம் ரூபாய் செலுத்தினார். கடந்தாண்டு, 13.௨௫ லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.