/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பட்டாவை ரத்து செய்ய வலியுறுத்தி முறையீடு
/
பட்டாவை ரத்து செய்ய வலியுறுத்தி முறையீடு
ADDED : நவ 11, 2025 02:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, அந்தியூர் தாலுகா கல்லாபுரம் கோட்டை பகுதி மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மனு வழங்கி கூறியதாவது:
எங்கள் பகுதியில் அரசு சார்பில் தொகுப்பு வீடு கட்டி கொடுத்து பலரும் வசித்து வருகிறோம். அவ்விடத்தில் உள்ள, 3 சென்ட் நிலத்தை பொது பயன்பாட்டுக்காக விட்டு வைத்திருந்தனர். அந்நிலத்தை வேறு சிலருக்கு அரசு சார்பில் பட்டா வழங்கி உள்ளனர். இவர்களுக்கு வேறு இடங்களில் நிலம் உள்ளது. தொகுப்பு வீட்டில் வசிப்போருக்கு கழிப்பறை, மயான வசதி செய்து கொடுக்க இந்த நிலத்தை ஒதுக்க வேண்டும். வேறு நபர்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு கூறினர்.

