/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'பர்கூரை 5 பஞ்சாயத்தாக பிரிக்க கோரி முறையீடு'
/
'பர்கூரை 5 பஞ்சாயத்தாக பிரிக்க கோரி முறையீடு'
ADDED : நவ 04, 2025 01:51 AM
ஈரோடு,  அந்தியூர், தாமரைக்கரையை சேர்ந்த மலைவாழ் பேடகம்பன லிங்காயத்து முன்னேற்ற நலச்சங்க நிர்வாகிகள் ராயன் உள்ளிட்டோர், ஈரோடு டி.ஆர்.ஓ., சாந்தகுமாரிடம், நேற்று மனு வழங்கி கூறியதாவது:
பர்கூர் மலைப்பகுதியில், 33 கிராமங்களில், 40,000க்கும் மேற்பட்ட மக்கள் வளிக்கிறோம். அந்தியூர், சத்தி, தாளவாடி தாலுகாவில், 53 மலை கிராமங்களில், 60,000க்கும் மேற்பட்ட பேடகம்பன சமூக மக்கள் வசிக்கிறோம். இச்சமூகத்தை புதிதாக அரசின் ஜாதி பட்டியலில் சேர்க்க வேண்டும். பர்கூர் மலையில் உள்ள, 33 கிராமங்களில் பர்கூர் 'அ, ஆ' என இரு வருவாய் கிராமங்கள் உள்ள. இங்கு, 3,182 ெஹக்டேர் விவசாய நிலங்கள் உள்ளன. சிலர் தோட்டம் அமைத்தும், சிலர் வானம் பூர்த்த பூமியாக விவசாயம் செய்கிறோம்.
இதில், 520 நிபந்தனைக்கு உட்பட்ட பட்டா நிலங்கள் உள்ளன. 'பூஜ்ய' மதிப்பு நிலங்களும் உள்ளன. இதனால், இவர்கள் அரசின் எந்த சலுகையும் பெற முடியவில்லை. வாழ்வாதாரம் பாதிக்கிறது. நிபந்தனை, பூஜ்ய பட்டாவை நீக்க அயன் பட்டாவாக மாற்றித்தர வேண்டும்.
பர்கூர் மலையில், 23,000 வாக்காளர்கள் உள்ளனர். பர்கூர் என ஒரு பஞ்சாயத்தாக உள்ளதால், அடிப்படை வசதி செய்ய நிதி கிடைப்பதில்லை. இதனை, 5 பஞ்சாயத்தாக பிரித்து நிதி வழங்கி, சாலை, தெரு விளக்கு, மின் வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

