/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டவுன் பஞ்.,களில் குறைந்தபட்ச ஊதியம் நிலுவையுடன் வழங்க கோரி முறையீடு
/
டவுன் பஞ்.,களில் குறைந்தபட்ச ஊதியம் நிலுவையுடன் வழங்க கோரி முறையீடு
டவுன் பஞ்.,களில் குறைந்தபட்ச ஊதியம் நிலுவையுடன் வழங்க கோரி முறையீடு
டவுன் பஞ்.,களில் குறைந்தபட்ச ஊதியம் நிலுவையுடன் வழங்க கோரி முறையீடு
ADDED : ஜூலை 03, 2025 01:16 AM
ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, டவுன் பஞ்., உதவி இயக்குனர் வெங்கடேஸ்வரனிடம், ஈரோடு மாவட்ட உள்ளாட்சி துறை பணியாளர் சங்கம் - ஏ.ஐ.டி.யு.சி., சார்பில், மாநில தலைவர் சின்னசாமி தலைமையில் மனு வழங்கினர். அதில் கூறியிருப்பதாவது:
திடக்கழிவு மேலாண்மை திட்டம், பொது சுகாதாரம், குடிநீர் வினியோகம் உள்ளிட்ட பணிகளில், 2,000க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இவர்களில், 1,500க்கும் மேற்பட்டோர் மகளிர் குழு பணியாளர்கள் என, தினக்கூலியாக பணி செய்கின்றனர். கடந்த, 2024 ஏப்., 1 முதல் கடந்த மார்ச், 31 வரை துாய்மை பணியாளர்களுக்கு தினமும், 562 ரூபாய், ஓட்டுனர்களுக்கு, 639 ரூபாய், குடிநீர் வினியோக பணியாளர்களுக்கு, 562 ரூபாய், டீ.பீ.சி., பணியாளர்களுக்கு, 562 ரூபாய் குறைந்தபட்ச ஊதியமாக வழங்க உத்தரவிடப்பட்டது. மேலும் அகவிலைப்படி உயர்வும் வழங்கப்படவில்லை.
இதற்கிடையில், 2025-26ம் ஆண்டுக்கு துாய்மை பணியாளர்களுக்கு, 569 ரூபாய், ஓட்டுனர்களுக்கு, 646 ரூபாய், குடிநீர் வினியோக பணியாளர்களுக்கு, 569 ரூபாய், டீ.பீ.சி., பணியாளர்களுக்கு 569 ரூபாய் என உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டது. புதிய ஊதிய தொகையை ஜூன் மாதத்துக்கு வழங்கி, நிலுவையை மொத்தமாக வழங்க வேண்டும். தவிர அவர்களுக்கு ஓய்வறை, ஆண்டுக்கு மூன்று சீருடை, நல வாரிய உறுப்பினராக்குதல், சட்டப்பூர்வ விடுமுறை, பாதுகாப்பு தொழில் உபகரணங்கள், தொழில் கருவிகள் வழங்க வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.