தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஆட்டோ ஸ்டாண்டுக்கு நிரந்தரஇடம் ஒதுக்க கோரி முறையீடு

ஆட்டோ ஸ்டாண்டுக்கு நிரந்தரஇடம் ஒதுக்க கோரி முறையீடு

ஆட்டோ ஸ்டாண்டுக்கு நிரந்தரஇடம் ஒதுக்க கோரி முறையீடு


ADDED : மே 12, 2026 05:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 12, 2026 05:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, புன்செய் புளியம்பட்டி பஸ் ஸ்டாண்டில் செயல்படும், அறம் ஆட்டோ ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் சங்கம் சார்பில், தலைவர் ராஜேந்திரன், செயலர் முஹம்மது அலி உள்ளிட்டோர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மனு வழங்கி கூறியதாவது:

கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன் நானும், என்னுடன் சேர்ந்த, 9 ஆட்டோ உறுப்பினர்கள் சேர்ந்து புன்செய் புளியம்பட்டி பஸ் ஸ்டாண்டின் உட்புறமாக ஆட்டோ நிறுத்தி ஓட்ட ஆரம்பித்தோம். தற்போது, 43 ஆட்டோ ஓட்டுனர், உரிமையாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். நாங்கள் அறம் சங்கம் பெயரில் பதிவு செய்து தொழில் செய்கிறோம். இதனால் பஸ்கள், மக்களுக்கு இடையூறு இல்லை. இந்நிலையில் புளியம்பட்டி நகராட்சி சார்பில், ஆட்டோ ஸ்டாண்டை காலி செய்ய கூறுகின்றார். தவறினால் சட்ட நடவடிக்கை எடுப்பதாக அறிவிப்பு கொடுத்துள்ளனர். இவ்விடத்தை காலி செய்து துாரமாக சென்றால் சவாரி கிடைக்காது. நகராட்சிக்கு மாதம் ஒரு ஆட்டோவுக்கு குறிப்பிட்ட தொகைகூட செலுத்த தயாராக உள்ளோம். ஆட்டோ ஸ்டாண்டை மாற்றக்கூடாது. இவ்வாறு கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us