ADDED : ஆக 18, 2026 05:24 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: ஈரோடு மாவட்ட சாலை போக்குவரத்து தொழி-லாளர் சங்க பொதுச்செயலர் கனகராஜ், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கி கூறிய-தாவது:
புதிய மோட்டார் வாகன சட்டப்படி, அந்தந்த விற்-பனையாளர்களே (டீலர்களே) வாகனத்தை பதிவு செய்யலாம். அதற்கான கட்டணத்தை அரசு விதி-களுக்கு உட்பட்டு அவர்களே பெறலாம். வாகனங்-களின் இழுவைத்திறன் (சி.சி.,), வாகனங்களின் விலை அடிப்படையில் பதிவு கட்டணம் தீர்மா-னிக்கப்படுகிறது. அவற்றை டீலர்கள் செலுத்தி-னாலும், கூடுதல் தொகை பெறுவதால் அதற்கான ரசீது வழங்குவதில்லை. எனவே வாகனங்களில் விலை, பெறப்படும் கட்டண விபரத்தை வாடிக்-கையாளர் பார்வையில் படும்படி வைத்து, ஒரி-ஜினல் ரசீதுகளை அவர்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
