/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
முதல்வர் மருந்தகத்துக்கு விண்ணப்பம் வரவேற்பு
/
முதல்வர் மருந்தகத்துக்கு விண்ணப்பம் வரவேற்பு
ADDED : நவ 09, 2024 01:17 AM
ஈரோடு, நவ. 9-
தமிழகத்தில் 'பொதுப்பெயர் (ஜெனிரிங்)' மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்கும் வகையில், 1,000 'முதல்வர் மருந்தகங்கள்' துவங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இம்மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள பி.பார்ம், டி.பார்ம் சான்று பெற்றவர்கள், அவர்களது ஒப்புதலுடன் மருந்தகம் அமைக்க, www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணைய தளம் மூலம் வரும், 20க்குள் விண்ணப்பிக்கலாம். அரசு மானியம், 3 லட்சம் ரூபாய், 2 தவணையாக ரொக்கமாகவும், மருந்தாகவும் வழங்கப்படும். கூடுதல் நிதி தேவைப்பட்டால், கூட்டுறவு வங்கி மூலம் கடன் பெறலாம். தாட்கோ, டேம்கோ போன்ற இதர பயனாளிகளும் விண்ணப்பிக்கலாம்.