/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சுடிதாரால் வாக்குவாதம்: இளம்பெண் விபரீதம்
/
சுடிதாரால் வாக்குவாதம்: இளம்பெண் விபரீதம்
ADDED : ஜூலை 09, 2025 01:28 AM
ஈரோடு, பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் குணால் குமார் தாஸ். ஈரோடு ரயில்வே இன்ஜின் பணிமனை ஊழியர். இவரின் மனைவி பீஹாரை சேர்ந்த கஞ்சன் குமாரி, 21; இருவருக்கும் ஒன்பது மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.
ஈரோடு சாஸ்திரி நகர் நேருஜி வீதியில் கணவனுடன் வசித்தார். மொபைலில் ஆன்லைன் மூலம் சுடிதார் வாங்க கஞ்சன் குமாரி முயன்றார். சம்பளம் வந்ததும் வாங்கலாம். அதுவரை வாங்க வேண்டாம் என கணவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. நேற்று காலை குணால் குமார் தாஸ் வேலைக்கு சென்றுவிட்டார்.
மதியம் வீட்டுக்கு வந்தபோது உட்புறம் பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகமடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றுபார்த்தார். மனைவி துாக்கில் தொங்கி கொண்டிருந்தார்.
அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். மருத்துவ பரிசோதனையில் கஞ்சன் குமாரி ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

