/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாங்காத பொருட்களுக்கு குறுஞ்செய்தி ரேஷன் கடை ஊழியர்களுடன் வாக்குவாதம்

ADDED : ஆக 08, 2025 01:08 AM
ஈரோடு, ஈரோடு மாநகராட்சி, 38வது வார்டு பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், கருங்கல்பாளையம் அடுத்த பொன்னுசாமி வீதியில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகம் அருகில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு புழுங்கல் அரிசி, பச்சரிசி, கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு, ஆயில் போன்ற பொருட்கள் மாதந்தோறும் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் நேற்று ரேஷன் கடைக்கு வந்த பெண்கள் சிலர், ஊழியருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, தாங்கள் வாங்கும் பொருட்களின் எடை குறைவாக இருப்பதாக குற்றம்சாட்டினர். அதாவது, ஒரு கிலோ வாங்கினால் 890 கிராம், இரண்டு கிலோ வாங்கினால், 1,700 கிராம் தான் இருப்பதாக தெரிவித்தனர். அதேபோல, கடந்த இரண்டு மாதங்களாக வாங்காத பொருட்களை எல்லாம், வாங்கி விட்டதாக மொபைல்போனுக்கு குறுஞ்செய்தி வருகிறது. இதுகுறித்து கேட்டால் முறையாக பதில் சொல்வதில்லை எனக்கூறி, கடை ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் பெண்கள் ஈடுபட்டனர். இந்த பிரச்சனை தொடர்பான வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.