/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வங்கதேச தொழிலாளர் பெருந்துறையில் கைது
/
வங்கதேச தொழிலாளர் பெருந்துறையில் கைது
ADDED : மே 18, 2024 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை,: வங்கதேச தொழிலாளி இருவர் பெருந்துறையில் கைது செய்யப்பட்டனர்.
பெருந்துறையை அடுத்த பணிக்கம்பாளையத்தில், உரிய ஆவணங்களின்றி பங்களாதேசத்தை சேர்ந்த இருவர் தங்கியிருப்பதாக, பெருந்துறை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் தெய்வராணி, எஸ்.ஐ., பாஸ்கரன் மற்றும் போலீசார் சோதனை செய்தனர். இதில் பங்களாதேசத்தை சேர்ந்த சைதுல் இஸ்லாம்,46; போலி ஆதார் கார்டில், பணிக்கம்பாளையத்தில், 15 ஆண்டுகளாக தங்கி, கட்டட வேலைக்கு செல்வது தெரிந்தது. அவருடன் பங்களாதேசத்தை சேர்ந்த நஸ்முல் ஹசன், 23, இருந்தார். அவருடைய பாஸ்போர்ட் காலவதியானது தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

