/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பசுபதீஸ்வரர் கோவிலில் அம்பு போடும் நிகழ்ச்சி
/
பசுபதீஸ்வரர் கோவிலில் அம்பு போடும் நிகழ்ச்சி
ADDED : அக் 03, 2025 01:36 AM
கரூர், கரூர் கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் அம்பு போடும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், நவராத்திரி விழா கடந்த, 22ல் தொடங்கியது. மக்களை துன்புறுத்தி வந்த மகிஷாசுரன் என்ற அரக்கனுடன், ஆதிபராசக்தி ஒன்பது நாட்கள் போரிட்டு, 10வது நாள் வெற்றி கொண்ட நிகழ்வை நவராத்திரி விழாவாக கொண்டாடப் படுகிறது. இக்கோவில் சோழர் மண்டபத்தில், நவராத்திரி கொலு வைக்கப்பட்டது.
விழாவில் பத்தாம் நாள் விஜயதசமியை முன்னிட்டு சுவாமி, அம்பாளுக்கு, 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நேற்று நடந்தது. பின், சுவாமி, ஸ்ரீ சந்திரசேகரர் அலங்காரத்தில் அமராவதி ஆற்றங்கரையில் அம்பு சேவை புறப்பாடு நடந்தது. அங்கு, அம்பு போடும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.