ADDED : ஆக 21, 2025 02:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை, பெருந்துறை அடுத்த, சுண்டக்காம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி
யில், கலைத்திருவிழா நேற்று நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் காளியப்பன் போட்டிகளை தொடங்கி வைத்தார். மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், பெற்றோர், எஸ்.எம்.சி., உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்களுக்கு ஒன்று, இரண்டு வகுப்புகளுக்கு தனியாகவும், மூன்று முதல், ஐந்து வகுப்புகளுக்கு தனியாகவும், ஆறு முதல், எட்டு வகுப்புக்கு தனியாகவும், தனிப்போட்டி மற்றும் குழு போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது. முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர் வட்டார அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.