/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கலைஞர் கைவினை திட்டம்1,239 விண்ணப்பம் பரிந்துரை
/
கலைஞர் கைவினை திட்டம்1,239 விண்ணப்பம் பரிந்துரை
ADDED : ஏப் 20, 2025 01:21 AM
ஈரோடு:காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துாரில், 'கலைஞர் கைவினை திட்டத்தை' முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். இதில் காணொலி காட்சி மூலம், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் பங்கேற்றனர். ஈரோடு மாவட்டத்தில் இத்திட்டம் நேரலையில் துவக்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தில், பயனாளிகள் அவர்களுக்கான கலை தொழிலில், 5 ஆண்டு அனுபவம் உள்ள, 35 வயது நிரம்பிய எந்த வகுப்பினரும் பங்கேற்கலாம். 50,000 ரூபாய் அதிகபட்சமாக கொண்ட, 25 சதவீத மானியத்துடன், 3 லட்சம் ரூபாய் வரை கடனுதவியாக பெறலாம். 5 சதவீதம் வரை வட்டி மானியம் வழங்கப்படும்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த மார்ச், 31 வரை, 2,065 விண்ணப்பம் பெறப்பட்டு, 1,239 விண்ணப்பங்கள் வங்கிக்கு பரிந்துரைக்கப்பட்டு, 388 பயனாளிகளுக்கு, 8.90 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில், 1.76 கோடி ரூபாய் மானியத்தொகைக்கான கடன் ஒப்புதல் ஆணை பெறப்பட்டுள்ளது. மேலும், 25 வகையான தொழிலில் ஈடுபட்டுள்ள கைவினைத்திறன் கலைஞர்கள், தொழில் முனைவோர் இத்திட்டத்தில் பயன் பெறலாம். கூடுதல் விபரத்துக்கு, மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை அணுகலாம்.