ADDED : மார் 15, 2026 07:30 AM
காங்கேயம்,:காங்கேயம்,
வெள்ளகோவில், குண்டடம் ஊராட்சி ஒன்றியங்க-ளுக்குட்பட்ட, 85
பயனாளிகளுக்கு, கலைஞரின் கனவு இல்லம் திட்டப்பணிகளுக்கான ஆணை வழங்கப்பட்டது.
காங்-கேயத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு திருப்பூர்
கலெக்டர் மனிஷ் தலைமை வகித்தார்.தமிழ் வளர்ச்சி மற்றும்
செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், காங்கேயம் தொகுதிக்கு உட்பட்ட
காங்கேயம், வெள்ளகோவில் மற்றும் குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில், 85
பயனாளிகளுக்கு தலா, 3.50 லட்சம் ரூபாய் மதிப்பில், 2.97 கோடி ரூபாய்
மதிப்-பீட்டில் வழங்கினார்.
காணொலி காட்சி வாயிலாக மனிதவள
மேலாண்மைத்துறை அமைச்சர் கயல்விழி, ஈரோடு எம்.பி., பிரகாஷ், பொள்ளாச்சி
எம்.பி., ஈஸ்வரசாமி, திருப்பூர் மேயர் தினேஷ்குமார் ஆகியோர், 749
பயனாளிகளுக்கு, 26.21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் என, 834
பயனாளிகளுக்கு, கலைஞரின் கனவு இல்லம் திட்டப் பணி-களுக்கான ஆணை
வழங்கினர்.
முன்னதாக காங்கேயம் ஊராட்சி ஒன்றியம் கீரனுார் ஊராட்சி
செல்லப்பம்பாளையத்தில், 13 லட்சம் மதிப்பில் பல்நோக்கு-மையம்
அமைக்கும் பணியை, அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில்
தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சிவா-னந்தன், கருணைபிரகாஷ்,
சிவபிரகாஷ், நகர செயலாளர் சேம-லையப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர்
உள்பட பலர் கலந்து கொண்டனர்.
