ADDED : மே 28, 2026 05:19 AM

ம்
ரோடு:ஈரோடு கோட்டை பகுதி யில் உள்ள, வாரணாம்பிகை சமேத ஆருத்ர கபாலீஸ்வரர் வகையறா கோவிலில், வைகாசி விசாக மஹோத்ஸவம் தேர்த்திருவிழா கடந்த 19ம் தேதி துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
அதிகாலை 4:00 மணிக்கு 12ம் கால யாக பூஜை மற்றும் நவசந்தி மூல மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில், வாரணாம்பிகை சமேத ஆருத்ர கபாலீஸ்வரர் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு, கனிமார்க்கெட் சாலை, பன்னீர்செல்வம் பார்க் வழியாக சென்று பெரிய மாரியம்மன் கோவில் அருகே தேர் நிறுத்தப்பட்டது. பின்னர் மாலையில் மீண்டும் காமராஜர் வீதி வழியாக சென்று, கோவிலில் நிலை சேர்க்கப்பட்டது. அப்போது வழியெங்கும் திரண்டிருந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, 13ம் கால யாக பூஜையுடன் சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது.
