ADDED : ஏப் 25, 2025 01:12 AM
சத்தியமங்கலம்:
தமிழ்நாடு ஆஷா பணியாளர் சங்கம் (ஏ.ஐ.டி.யு.சி.,), ஈரோடு மாவட்ட பேரவை கூட்டம் சத்தியமங்கலத்தில் நடந்தது. ஏ.ஐ.டி.யு.சி., மாநில செயலாளர் சின்னசாமி, தலைமை வகித்தார்.
ஆஷா பணியாளர் என அழைக்கப்படும் அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்களுக்கு மாதம், 20,000 ரூபாய் குறைந்தபட்ச ஊதியம் வழங்கவேண்டும். ஆஷா பணியாளர்களை கிராம செவிலியர் காலி பணியிடங்களில் நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் அடுத்த மாதம், ௧௨ம் தேதி நடக்கும் தர்ணா போராட்டத்தில், ஈரோடு மாவட்டத்தில் இருந்து ஆஷா பணியாளர் திரளானோர் பங்கேற்க முடிவு செய்யப்
பட்டது.
ஆஷா பணியாளர் சங்க ஈரோடு மாவட்ட அமைப்பு குழுவில் ராணி, யாஸ்மின் பேகம் (பர்கூர்), தேவி, ஹேமலதா (ஒசூர்), வள்ளியம்மாள், பூரணி (கடம்பூர்), மங்குலி, கெம்பம்மாள் (தாளவாடி), கணேசன் (பர்கூர்) உள்ளிட்ட 17 பேர் கொண்ட மாவட்ட சங்க அமைப்பு குழு தேர்வு செய்யப்பட்டது.

