/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சத்துணவு மையத்தில் உதவியாளர் பணி; விண்ணப்பிக்க அழைப்பு
/
சத்துணவு மையத்தில் உதவியாளர் பணி; விண்ணப்பிக்க அழைப்பு
சத்துணவு மையத்தில் உதவியாளர் பணி; விண்ணப்பிக்க அழைப்பு
சத்துணவு மையத்தில் உதவியாளர் பணி; விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : டிச 16, 2025 09:18 AM
ஈரோடு: ஈரோடு மாவட்ட பள்ளிகளில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள, 64 சமையல் உதவியாளர் பணியிடம் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுகிறது. தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
இப்பணிக்கு மாதம், 3,000 ரூபாய் தொகுப்பூதியத்தில், ஓராண்டு கால பணிக்கு பின், சிறப்பு காலமுறை ஊதியத்தில், ஊதிய நிலை-1க்கு - 3,000 - 9,000 ரூபாய் வழங்கப்படும். பழங்குடியினர் தவிர இதர பிரிவினருக்கு, 21 - 40க்குள்ளும், பழங்குடியினர், 18 - 40 வயதுக்குள், விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், 20 - 40க்குள் இருக்க வேண்டும்.
மொத்த காலிப்பணியில், 25 சதவீதம் விதவை, கணவரால் கைவிடப்பட்டோரால் நிரப்பப்படும். erode.nic.in என்ற வலைதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை வரும், 23 முதல் ஜன., 9 வரை அலுவலக வலை நாட்களில் அந்தந்த பகுதி மாநகராட்சி, நகராட்சி, யூனியன் அலுவலகத்தில் சமர்பிக்கலாம்.
காலி பணியிய விபரம் (யூனியன் வாரியாக): ஈரோடு-8, மொடக்குறிச்சி-3, கொடுமுடி-1, பெருந்துறை-4, சென்னிமலை-2, அம்மாபேட்டை-6, அந்தியூர்-11, கோபி-5, நம்பியூர்-6, டி.என்.பாளையம்-1, சத்தியமங்கலம்-8, பவானிசாகர்-2, தாளவாடி-1, ஈரோடு மாநகராட்சி-4, கோபி நகராட்சி-1, சத்தியமங்கலம் நகராட்சி-1.

