/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
த.மா.கா.,வினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
/
த.மா.கா.,வினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 06, 2025 02:20 AM
ஈரோடு: த.மா.கா., சார்பில் கோவை மண்டல நிர்வாகி களுக்கான, அடை-யாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி, ஈரோட்டில் நேற்று நடந்தது. கட்சி தலைவர் வாசன் பங்கேற்றார்.
ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், நீலகிரி, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
முன்னதாக வில்லரசம்பட்டி நால்ரோடு பகுதியில், கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வாசன் தலைமையில் நடந்தது. அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் நீதி வேண்டியும், தமி-ழக அரசின் விசாரணை முறையை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மனித சங்கிலி போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சி பொது செயலாளர் யுவராஜா, மாநில துணை தலைவர் விடியல் சேகர், மாவட்ட தலைவர் விஜயகுமார், தெற்கு மாவட்ட தலைவர் சண்முகம் உள்பட, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்-றனர்.