/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு நந்தா கல்லுாரிகளில் ஆஸி., நிறுவன வளாகத்தேர்வு
/
ஈரோடு நந்தா கல்லுாரிகளில் ஆஸி., நிறுவன வளாகத்தேர்வு
ஈரோடு நந்தா கல்லுாரிகளில் ஆஸி., நிறுவன வளாகத்தேர்வு
ஈரோடு நந்தா கல்லுாரிகளில் ஆஸி., நிறுவன வளாகத்தேர்வு
ADDED : ஆக 06, 2025 12:54 AM
ஈரோடு, ஈரோடு நந்தா பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லுாரிகளின் இறுதியாண்டு பயின்று வெளியேறும் தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் மாணவர்களுக்கு, ஆஸ்திரேலியாவை தலைமையிடமாக கொண்டு சென்னையில் செயல்படும் “பி.ஐ.-3 டெக்னாலஜிஸ் நிறுவனம் சார்பில் வளாகத்தேர்வு நடந்தது.
ஸ்ரீநந்தா அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமை வகித்தார். அந்நிறுவனத்தின் மனிதவள மேலாளர் சுஷ்மிதா தலைமையிலான குழுவினர், நிகழ்ச்சியினை துவக்கி வைத்தனர்.
இதை தொடர்ந்து பி.ஐ.-3 டெக்னாலஜிஸ் நிறுவன உறுப்பினர் திலீப் மாணவர்களிடையே உரையாற்றனார். வளாகத்தேர்வில், 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு எழுத்து தேர்வு, அதை தொடர்ந்து நேர்முகத்தேர்வு நடந்தது.