/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பைக் டாக்ஸிக்கு எதிர்ப்பு: ஆட்டோ டிரைவர் மனு
/
பைக் டாக்ஸிக்கு எதிர்ப்பு: ஆட்டோ டிரைவர் மனு
ADDED : ஜூலை 01, 2025 01:37 AM
ஈரோடு, ஈரோட்டில், பைக் டாக்ஸிக்களை அனுமதிக்கக்கூடாது. தடை செய்ய வேண்டும் எனக்கூறி, ஆட்டோ ஓட்டுனர்கள் மனு வழங்கினர்.
ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட், அரசு மருத்துவமனை பகுதிகளில் ஆட்டோ ஓட்டும், 60க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள், அ.தி.மு.க., பகுதி செயலாளர் மனோகரன் தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், டி.ஆர்.ஓ., சாந்தகுமாரிடம் நேற்று வழங்கிய மனுவில் கூறியதாவது:
ஈரோடு மாநகரில் ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட், அரசு மருத்துவமனை உட்பட பல பகுதிகளில் ஆட்டோ ஸ்டாண்ட்கள் அனுமதி பெற்று, ஆர்.டி.ஓ., பதிவுகளுடன் இயக்கப்படுகிறது. பயணிகளுக்கான ஆட்டோக்களை முறையாக செயல்படுத்தி, அதன் மூலம் வருவாய், வாழ்வாதாரத்தை ஈட்டி வருகிறோம். தற்போது ரேபிடோ என்ற பெயரில் பைக் டாக்ஸிக்கள், எவ்வித அனுமதியுமின்றி, இரவு, பகல் என அனைத்து நேரங்களிலும் அனைத்து இடங்களில் இருந்தும் இயக்குகின்றனர். இவர்கள் வாட்ஸ் ஆப் குரூப், ஆப்கள் மூலம் பயணிகளை கவர்கின்றனர். இதை அனுமதிக்கக்கூடாது. பைக் டாக்ஸிகளுக்கு தடை விதிக்க வேண்டும். இதுபோன்ற பைக் டாக்ஸிகளில் விபத்து, குற்ற செயல் நடந்தால் கண்டறிவதும் சிரமம். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.