/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
புதிய பஸ் ஸ்டாண்டில் ஆட்டோ இயக்கம்;மாநகராட்சியில் விண்ணப்பிக்க யோசனை

ADDED : டிச 04, 2025 05:55 AM

ஈரோடு: ஈரோடு, சோலார் புதிய பஸ் ஸ்டாண்ட் முதல்வரால் திறக்கப்பட்டு, இன்று முதல் பஸ் இயக்கம் துவங்குகிறது. இந்நிலையில், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமியை, அனைத்து ஆட்டோ தொழிற்சங்க மாவட்ட நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.
புதிய பஸ் ஸ்டாண்டில் ஆட்டோ ஸ்டாண்ட் பாதுகாப்பாக அமைப்பது, அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர். தொழிற்சங்கங்களில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள், தொழிற்சங்கங்களில் இல்லாதவர்களையும் ஏற்பது பற்றி கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்ற அமைச்சர் முத்துசாமி, கலந்தாலோசனை செய்தார்.
பின், ஆட்டோ ஓட்டுனர்கள் தங்களது ஓட்டுனர் உரிமம், பேஜ், ஆட்டோவின் ஆர்.சி., - பர்மிட் ஆகிய ஆவணங்களை இன்று முதல் வரும், 8 வரை மாநகராட்சி அலுவலகத்தில் சமர்பித்து விண்ணப்பிக்கலாம் என, யோசனை தெரிவிக்கப்பட்டது.